×

கர்நாடக வளர்ச்சிக்கு எதிரியான ஊழலை வேரறுக்க அரசு நடவடிக்கை: பேரவை கூட்டுக்கூட்டத்தில் ஆளுநர் தாவர்சந்த் கெலாட் உரை

பெங்களூரு: கர்நாடக வளர்ச்சிக்கு எதிரியாக விளங்கும் ஊழலை கன்னட மக்களின் ஆதரவுடன் வேரோடு ஒழிப்பதற்கு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது என்று பேரவை கூட்டுக்கூட்டத்தில் ஆளுநர் தாவர்சந்த் கெலாட் உரையாற்றினார். பெங்களூரு, விதான சவுதாவில் பேரவை, மேலவை கூட்டுக்கூட்டம் நேற்று நடந்தது. காங்கிரஸ் அரசின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இதில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் உரையாற்றுவதற்கு அழைக்கப்பட்டிருந்தார். அரசின் அழைப்பை ஏற்ற கவர்னர் தாவர்சந்த் கெலாட் விதான சவுதாவிற்கு வந்த போது முதல்வர் சித்தராமையா, பேரவை தலைவர் யுடி காதர் மற்றும் பேரவை, மேலவை செயலாளர்கள் அழைத்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து பேரவையில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, ‘ ஆரம்பம் முதல், கர்நாடக மக்கள் சாதி, மதத்திற்கு எதிரான மனநிலையுடன் இருந்துள்ளனர். தற்போதும் அது போல் இருந்து வருகின்றனர். மாநில அரசு மக்களிடம் சமாதானத்தையும் ஏற்படுத்தி மக்களிடம் காணப்படும் ஏற்ற தாழ்வுகளை சீர்செய்து அமைதியான சமுதாயத்தை உருவாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இன்னும் ஐந்து வருடத்தில் மக்களின் எண்ணத்திலும் சமுதாயத்தின் வளர்ச்சியிலும் இதை நாம் காணமுடியும்.

கர்நாடக மாநிலம் முழுவதும் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சக்தி என்ற இலவச பஸ் திட்டத்தின் கீ்ழ் ஒவ்வொரு நாளும் சுமார் 50 லட்சம் பெண்கள் பயன் அடைந்து வருகின்றனர். வளர்ச்சிக்கு எதிரியான ஊழலை கன்னட மக்களின் ஆதரவுடன் வேரோடு ஒழிப்பதற்கு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. சிறப்பான நிர்வாகம் அனைவருக்கும் சம உரிமை அளிப்பதன் மூலமாக மாநில அரசு புதிய கர்நாடகா உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது’ இவ்வாறு அவர் கூறினார்.

The post கர்நாடக வளர்ச்சிக்கு எதிரியான ஊழலை வேரறுக்க அரசு நடவடிக்கை: பேரவை கூட்டுக்கூட்டத்தில் ஆளுநர் தாவர்சந்த் கெலாட் உரை appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Governor ,Davarchand Gehlot ,Bengaluru ,
× RELATED கர்நாடகாவின் பெல்லாரி நகரில் உள்ள...